Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2024 மாச்சு

ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மேம்பாடொன்றினால் ஆதரவளிக்கப்பட்டு வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 மாச்சில் சுருக்கமடைந்ததுடன் (ஆண்டிற்காண்டு அடிப்படையில்) இது 2022 ஓகத்திலிருந்து பதிவுசெய்யப்பட்ட உயர்ந்தளவிலான வருவாய்களாகக் காணப்பட்டது.

பணிகள் துறையும் சுற்றுலாத் துறையினால் முக்கியமாகப் பங்களிக்கப்பட்டு 2024 மாச்சில் குறிப்பிடத்தக்க தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளையில் கடல் போக்குவரத்து (சரக்கு) பணிகள் நியதிகளிலும் கணிசமானளவிலான உட்பாய்ச்சல்கள் பதிவுசெய்யப்பட்டன.

பருவகாலப் போக்குடன் இசைந்து செல்லும் விதத்தில் தொழிலாளர் பணவனுப்பல்கள்; 2024 மாச்சில் தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்பட்டன.

கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை மற்றும் அரச பிணையங்கள் சந்தை என்பவற்றில் வெளிநாட்டு முதலீடுகள் 2024 மாச்சில் மாதாந்த தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2024 ஏப்பிறலில் சிறு அதிகரிப்பினைக் காண்பித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 மாச்சின் 0.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2024 ஏப்பிறலில் 1.5 சதவீதமாகப் பதிவாகி சிறு அதிகரிப்பொன்றினைக் காண்பித்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் (கட்டடவாக்கம்) - 2024 மாச்சு

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 55.9 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்த மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு மாச்சில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. நடுநிலையான அடிப்படை அளவிற்கு மேல் இச்சுட்டெண் காணப்படுகின்ற தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இது விளங்கி, கட்டடவாக்க நடவடிக்கைகளில் நிலையான மேம்படுதலைக் குறித்துக்காட்டுகின்றது.

ஆசியாவிற்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை பிராந்திய ஆலோசனைக் குழுக் கூட்டத்தை இலங்கை மத்திய வங்கி 2024 ஏப்பிறல் 29 அன்று கொழும்பில் நடாத்தியது

ஆசியாவிற்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை பிராந்திய ஆலோசனைக் குழு 2023.04.29 அன்று கொழும்பில் கூடியது. உன்னிப்பான கண்காணிப்பைத் தேவைப்படுத்திய அண்மைக்கால நிதியியல் அபிவிருத்திகள் மற்றும் பாதிக்கப்படும்தன்மைகளை இக்கலந்துரையாடல்கள் மையப்படுத்தியிருந்தன. அதற்கமைய, பிராந்தியம் முழுவதும் கிறிப்டோ-சொத்துச் செயற்பாடுகளுக்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பின் நடைமுறைப்படுத்தலை ஊக்குவிப்பதற்கான வழிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவில் அண்மைக்கால முன்னேற்றங்கள், நிதியியல் துறையில் அதன் வளர்ச்சியடைகின்ற உபயோகம் அத்துடன் நிதியியல் உறுதிப்பாட்டிற்கான அதன் உள்ளார்த்தங்கள் என்பவற்றைக் குழு கலந்துரையாடியது. காலநிலை மாற்றத்திலிருந்து தோன்றுகின்ற நிதியியல் இடர்நேர்வுகளை கையாளுவதன் மீது பிராந்தியத்தினுள் இடம்பெற்றுவருகின்ற முன்னேற்றத்தையும் உறுப்பினர்கள் மீளாய்வுசெய்ததுடன், எல்லை கடந்த கொடுப்பனவுகளை மேம்படுத்துதல் மீதான முன்னேற்றம் மற்றும் விரைவானதாகவும் மலிவானதாகவும் மிகவும் வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் மற்றும் அனைவரையும் வசதிக்குட்படுத்துவதாகவும் அவற்றை இடம்பெறச்செய்வதிலுள்ள முக்கிய சவால்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. 

இலங்கை மத்திய வங்கி அதன் தொடக்க வெளியீடுகளான ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் என்பவற்றை வெளியிடுகின்றது

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 80இன் கீழான 2023ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 99இன் கீழான 2023ஆம் ஆண்டிற்கான மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் எனும் தொடக்க வெளியீடுகள் சனாதிபதியும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். பி நந்தலால் வீரசிங்க அவர்களினால் இன்று (2024 ஏப்பிறல் 25) கையளிக்கப்பட்டன.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரித்தல் மற்றும் பணிகள்) - 2024 மாச்சு

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 மாச்சில் தயாரித்தல் மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றன.

தயாரித்தலுக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரித்தல்)இ 2024 மாச்சில் 62.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்துஇ தயாரித்தல் நடவடிக்கைகளில் விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. மூன்று ஆண்டுகளில் பதிவாகியிருந்த அதிகூடிய தயாரித்தல் கொ.மு.சுட்டெண்ணை இது குறிக்கின்றது. கேள்வியினால் பிரதானமாகத் தூண்டப்பட்டுஇ அனைத்து துணைச் சுட்டெண்களும்  மாதத்திற்கு மாதம் அடிப்படையில் விரிவடைந்தமை இவ்வதிகரிப்பிற்கு பருவகால பங்களித்தன.  

Pages